`2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவிற்கு புதிய விடியலைத் தரும்'- முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவிற்கு புதிய விடியலைத் தரும் - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

’’2021-ல் தமிழ்நாட்டிற்கு எப்படி ஒரு விடியலை ஏற்படுத்தி கொடுத்தீர்களோ, அதே மாதிரி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தி தரக்கூடிய நிலை வரவிருக்கிறது. அதற்கு தயாராக இருங்கள்’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக அயலக அணி துணைச்செயலாளர் பரிதி இளம்சுருதி திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய முதல்வர், ‘’ இன்று பிப்ரவரி 9, இதேத் தேதியில் தான் 1969 -ல் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டிற்கு பல நல்லத்திட்டங்களை தந்து இந்தியாவிற்கே வழிக்காட்டியாக திகழ்ந்தவர் கலைஞர். கலைஞரின் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனாதான் கலைஞர் பேனா. டைடல் பார்க் அமைக்க கையெழுத்து போட்டது தான் கலைஞர் பேனா.

குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளை வித்திட்டது கலைஞர் பேனா. பூம்புகாரை உருவாக்க திட்டமிட்டு அதற்கு கையெழுத்திட்டது கலைஞரின் பேனா. லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்க காரணமாக இருந்ததும் கலைஞரின் பேனா தான்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. திமுக உறுப்பினர்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு பிரதமரால் பதிலளிக்க முடியவில்லை. கருப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாக கூறினார் செய்தாரா? ஒவ்வொருவர் வங்கி கணக்கில் 15 லட்சம் போடப்படும் என கூறினார் 15 ஆயிரமாவது போட்டாரா?. 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எம்ய்ஸ் என்னவானது என கேட்கிறார்களே பதிலளித்தாரா?.

நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கூறிய உப்புமா கதையை மேற்கோள்காட்டி பேசினார். உப்புக் கதைப் போலத்தான் பாஜகவின் கதையும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாததால் பாஜக மீண்டும் ஆட்சியில் வந்துவிட்டது. ஆனால் இந்த முறை அது நடக்காது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கும்.

2021-ல் தமிழ்நாட்டிற்கு எப்படி ஒரு விடியலை ஏற்படுத்தி கொடுத்தீர்களோ. அதே மாதிரி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தி தரக்கூடிய நிலை வரவிருக்கிறது. அதற்கு தயாராக இருங்கள்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in