ஏக்நாத் ஷிண்டேவைத் தொடர்ந்து அஜித் பவார்: மகாராஷ்டிராவில் 2 ஆண்டுகளில் 2 சம்பவங்கள் செய்தது பாஜக!

அஜித் பவார்
அஜித் பவார்ஏக்நாத் ஷிண்டேவைத் தொடர்ந்து அஜித் பவார்: மகாராஷ்டிராவில் 2 ஆண்டுகளில் 2 சம்பவங்கள் செய்தது பாஜக!

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஒன்றாக இணைப்பதற்கான சிக்கலான அரசியல் வியூகத்தின் முக்கிய நபராக கருதப்படுபவர் சரத் பவார். ஆனால், இப்போது அவரின் உறவினரான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியையே உடைத்து அதிர்ச்சியளித்துள்ளார்.

40 சிவசேனா எம்.எல்.ஏக்களுடன் கட்சியிலிருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசை கடந்த ஜூன் மாதத்தில் வீழ்த்தினார். அடுத்த ஒரு வருடத்தில் இப்போது அஜித் பவார் என்சிபி எம்.எல்.ஏக்களை உடைத்து மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி கூட்டணியை ஆட்டம் காண செய்துள்ளார். மகா விகாஸ் அகாதி கூட்டணியை உடைக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக நடத்தும் இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் இதுவாகும்.

மகாராஷ்டிர மாநில சட்டசபையில் உள்ள என்சிபியின் மொத்தமுள்ள 53 எம்எல்ஏக்களில் 40க்கும் மேற்பட்டோர் ஆதரவு தனக்கு இருப்பதாக அஜித் பவார் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க அவருக்கு 36 எம்எல்ஏக்களுக்கு மேல் ஆதரவு இருக்க வேண்டும்.

அஜித் பவார், 9 கட்சி தலைவர்களுடன் இன்று மகாராஷ்டிர அரசில் இணைந்தார். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அவர் அந்த பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார். சமீபத்தில் என்சிபியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட பிரபுல் படேல் மற்றும் சகன் புஜ்பால், திலீப் வால்ஸ் பாட்டீல், ஹசன் முஷ்ரிப், ராம்ராஜே நிம்பல்கர், தனஞ்சய் முண்டே, அதிதி தட்கரே, சஞ்சய் பன்சோட், தர்மராவ் பாபா அத்ரம் மற்றும் அனில் பைதாஸ் பாட்டீல் ஆகியோர் இன்று பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என நேற்று முன்தினம் பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். ஏக்நாத் ஷிண்டே சமீபத்தில் டெல்லியில் பாஜக தலைவர்களையும் சந்தித்தார். சரத் பவாரின் மகளும், என்சிபி தலைவருமான சுப்ரியா சுலே கட்சியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அஜித் பவார் சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர விரும்பவில்லை என்று கூறியிருந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அதற்கு கடும் இடையூறு அளிப்பதால் மகா விகாஸ் அகாதியில் உள்ள சரத் பவாரின் கட்சி இப்போது துண்டாடப் பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in