`இந்த நேரத்தில் எதற்கு வந்தீர்கள்'- நள்ளிரவில் பாஜக பெண் பிரமுகர் வீட்டிற்குள் புகுந்த 2 காவலர்கள் சஸ்பெண்ட்

ஆர்.கே.நகர் காவல் நிலையம்
ஆர்.கே.நகர் காவல் நிலையம் `இந்த நேரத்தில் எதற்கு வந்தீர்கள்'- நள்ளிரவில் பாஜக பெண் பிரமுகர் வீட்டிற்குள் புகுந்த 2 காவலர்கள் சஸ்பெண்ட்

நள்ளிரவில் பாஜக பெண் பிரமுகர் வீட்டிற்கு குடிபோதையில் சென்று ரகளையில் ஈடுபட்ட இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை மணலி சாலையில் வசித்து வருபவர் விஜயகுமார்(33). பாஜக பிரமுகரான இவரது மனைவி தேவி நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலராக போட்டியிட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டிற்கு குடிபோதையில் வந்த இருவர் கதவை தட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவியின் கணவர் வெளியே வந்து அவர்களிடம், இந்த நேரத்தில் எதற்கு இங்கு வந்தீர்கள் என கேட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த இருவரும் நாங்கள் போலீஸ் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

உடனே தேவியின் கணவர் விஜயகுமார், அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியதுடன் இது குறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி விசாரணை நடத்தியதில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் பாலாஜி(33) மற்றும் பரீத்ராஜ்(29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து பாலாஜி, பரீத்ராஜ் ஆகிய இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து இரு காவலர்களிடம் துறைரீதியான விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in