நெல்லையில் பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக முன்னாள் எம்.பி., வேட்புமனு தாக்கல்!

முன்னாள் எம்பி ராமசுப்பு
முன்னாள் எம்பி ராமசுப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் பரூஸ்க்கு எதிராக 2 காங்கிரஸ் நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், முன்னாள் எம்பி ராமசுப்புவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. புதுச்சேரியில் வைத்திலிங்கம், தமிழகத்தில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி தொகுதியில் கோபிநாத், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கடலூர் தொகுதியில் எம்.கே.விஷ்னு பிரசாத், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம், விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர், மயிலாடுதுறை தொகுதியில் ஆர்.சுதா, கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த், நெல்லை தொகுதியில் ராபர்ட் பரூஸ் போட்டியிடுகின்றனர். இவர்கள் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை, அந்தெந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்தனர்.

ராபர்ட் பரூஸ்
ராபர்ட் பரூஸ்

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், இன்று திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் பரூஸ், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வானமாமலை மற்றும் நெல்லை மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி ராமசுப்பு ஆகியோர் இன்று வேட்புமனுதாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டோக்கன் வழங்கப்பட்டது.

ராமசுப்பு
ராமசுப்பு

இதில், முன்னாள் எம்பி ராமசுப்புவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. ஆனால், டோக்கனில் குறிப்பிட்ட நேரம் கடந்து வந்ததால், வானமாமலையின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. அதனால், அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறீர்களா அல்லது சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நாங்கள் தான் காங்கிரஸ்காரர்கள். சுயேச்சையாக போட்டியிடவில்லை என்று திரும்ப திரும்ப அந்த பதிலையே கூறினர். காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக 2 காங்கிரஸ் பிரமுகர்கள் வேட்புமனு தாக்கல் செய்தது நெல்லை காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in