`ஒரு வாரத்தில் பேப்பர் ரிலீஸ் செய்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலகுவார்கள்'- அண்ணாமலை ஆரூடம்

`ஒரு வாரத்தில் பேப்பர் ரிலீஸ் செய்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலகுவார்கள்'- அண்ணாமலை ஆரூடம்

"இன்னும் ஒரு வாரத்தில் இதே இடத்தில் பேப்பர் ரிலீஸ் செய்வோம். இதன் மூலம் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகல் இருக்கும். பதவி விலகியே ஆகவேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆரூடம் கூறினார்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, "நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும்கூட பேசினார். அதில் பிரதமரின் பேச்சு எப்படி இருந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். தமிழ் கலாச்சாரத்தை தனது தோளில் தூக்கி, இந்த மண்ணின் மீது எவ்வளவு மரியாதை இருக்கிறது, இந்த மண்ணை எப்படி நேசிக்கிறேன் என்று பிரதமர் பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையிலுமே தெரிந்தது.

நீட் பொம்மையை வைத்து நாடகமாடுகின்றனர். பிரதமர் உங்களைப்போல நிறைய பேரை பார்த்துவிட்டு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அரசியல் என்பது கும்மிடிப்பூண்டியிலிருந்து கோபாலபுரம் வரையிலானது.

மோடியின் அரசியல் என்பது இந்திய அரசியலை தாண்டி உலக அரசியலுக்கு சென்றுவிட்டார். எனவே, பிரதமரிடம் சிறுபிள்ளை போல் பேசாமல் சரியான முறையில் பேசுங்கள். அவ்வாறு பேசினால், நீங்கள் கேட்காமல் தமிழகத்திற்கு வரவேண்டிய வேலைகளை பாஜக செய்யும். எனவே முதல்வர் இதுபோன்ற நாடகங்களை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான அரசியலை கையிலெடுத்து அடுத்த 4 ஆண்டு காலம் வழிநடத்துவார் என்று நம்புகிறேன்.

திராவிட மாடல் வளர்ச்சி என்று நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு துறை வாரியாக புத்தகம் வெளியிடப் போகிறோம், ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு அமைச்சராக இன்னும் 15 நாட்களில் ஊழல் பட்டியல் வரும். புத்தகத்தை வெளியிடுவோம். தமிழக மக்களுக்கு தெரியும். இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியவேண்டும். முதல்வர் யாரு, நம்பர் 1 முதல்வர் என்றால், ஊழலில் நம்பர் 1 முதல்வர் என்பதால் சொல்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் இதே இடத்தில் பேப்பர் ரிலீஸ் செய்வோம். இதன் மூலம் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகல் இருக்கும். பதவி விலகியே ஆகவேண்டும்” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in