இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவருக்கு 2 லட்சம் நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு

இந்திய  கடற்படையால் சுடப்பட்ட மீனவருக்கு 2 லட்சம் நிதி:  தமிழக முதல்வர் அறிவிப்பு

இந்திய கடற்படையால் சுடப்பட்டு காயமடைந்த தமிழக மீனவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய எல்லையான மன்னார்வளைகுடா பகுதியில் நேற்று நள்ளிரவில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் காவல்படையினர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் படகில் இருந்த மீனவர் வீரவேல் படுகாயமடைந்தார்.

இதையடுத்து மதுரை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதோடு, காயமடைந்த மீனவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்ச ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in