
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை முதல் 21 வயதான குடும்பத்தலைவிகளுக்கு 2 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த, ஆதிதிராவிடர் மற்றும் நடுத்தர வர்த்தகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் இலவச கியாஸ் சிலிண்டர்கள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. ஆனால், இந்த இலவச கியாஸ் சிலிண்டர்களைப் பெற பெண்ணுக்கு 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
விலைவாசி உயர்வின் காரணமாக இந்த இலவசமாக 2 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளது என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பு உத்தரப்பிரதேச மாநில குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.