
கோவை மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக கவுன்சிலர்களை பார்க்க சென்ற அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் உட்பட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் கடந்த 31ம் தேதி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. அப்போது குப்பைகள் அகற்றுவது தொடர்பாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது 17வது வார்டு திமுக உறுப்பினர் ரவிக்குமார் என்பவர், நாற்காலி ஒன்றை அதிமுக உறுப்பினர்கள் மீது வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த விவகாரத்தில் திமுக உறுப்பினர் ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக உறுப்பினர்கள் கடந்த 3 நாட்களாக நகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களை சந்திப்பதற்காக கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏ-வான பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் அதிமுக எம் எல்ஏ-வான ஏ.கே.செல்வராஜ் ஆகியோர், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினருடன் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாரின் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்ற எம்எல்ஏக்கள் உட்பட அனைவரையும் போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 அதிமுக கவுன்சிலர்களையும் போலீஸார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!
ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!