சபாநாயகர் அப்பாவு தொகுதியில் ஆதீன இடத்தில் 19 கல்குவாரிகள்: அதிர்ச்சியை கிளப்பிய பெண்ணின் வீடியோ

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவுசபாநாயகர் அப்பாவு தொகுதியில் ஆதீன இடத்தில் 19 கல்குவாரிகள்: அதிர்ச்சியை கிளப்பிய பெண்ணின் வீடியோ

சபாநாயகர் அப்பாவு தொகுதியில் தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் 19 கல் குவாரிகள் செயல்படுவதாகவும், சபாநாயகர் அப்பாவு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெண் ஒருவர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. பாஜகவின் ஐடி விங் நிர்வாகிகள் இதை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவில் பேசிய பெண்
வீடியோவில் பேசிய பெண்

நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இருக்கன்துறை கிராமத்தில் நின்று அந்தப் பெண் பேசும் காணொலியில், “இருக்கன்துறை கிராமத்தில் தருமபுரம் ஆதீன மடத்திற்குச் சொந்தமாக இரண்டாயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இங்கு ஆதீன மடத்திற்கே தெரியாமல் 19 கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது திமுக அரசு. இதுகுறித்து சபாநாயகர் தொகுதி என்னும் முறையில் அப்பாவுவை சந்தித்துக் கேட்டேன். ஆனால் அவரோ, என்னது என் தொகுதியில் கல்குவாரி நடக்கிறதா? என தெரியாதது போல் கேட்டது அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அளிக்கிறது. விவசாயம் சூழ்ந்த பகுதியான இங்கு எப்படி அனுமதி கொடுக்கமுடியும்? தமிழகத்தில் தான் வாழ்கிறோமா என சந்தேகம் எழுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு என்று சொல்லி அரசின் அனுமதியை எடுத்துவிட்டு கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்தப்பட்டு வருகின்றது” என பேசி உள்ளார். ஆனால் அந்தப் பெண் குறித்த விவரங்கள் தெரியவில்லை. குறித்த அந்த வீடியோவை பாஜகவினர் அதிகளவில் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in