குழந்தை திருமண குற்ற வழக்குகளில் 1,800 ஆண்கள் கைது: அசாம் முதல்வர் அதிரடி

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாஅசாமில் குழந்தை திருமண குற்ற வழக்குகளில் 1,800 ஆண்கள் கைது

அசாமில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 1,800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

குழந்தை திருமண குற்றம் தொடர்பாக ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள ட்வீட்டில், "குழந்தை திருமண தடைச் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக தற்போதுவரை மாநிலம் முழுவதும் 1800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை திருமண வழக்குகளில் சகிப்புத்தன்மையைக் காட்ட வேண்டாம் என்று காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளேன். பெண்கள் மீதான மன்னிக்க முடியாத மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற மனப்பான்மையுடன் செயல்பட அசாம் காவல்துறையை நான் கேட்டுக் கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

அசாமில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நேற்று நாகோன் மாவட்டத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார். ஜனவரி மாதம் குழந்தை திருமணத்திற்கு எதிராக அசாம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தினை தெரிவித்தார். நாகோன் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் (42 சதவீதம்) மற்றும் 18 வயதை எட்டுவதற்கு முன்பே குழந்தை பெற்ற பெண்கள் (15 சதவீதம்) உள்ளனர் என்ற அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in