அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்கள் உள்பட 18 பேர் அதிரடியாக நீக்கம்: ஈபிஎஸ் தடாலடியாக அறிவிப்பு

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்கள் உள்பட 18 பேர் அதிரடியாக நீக்கம்: ஈபிஎஸ் தடாலடியாக அறிவிப்பு

அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்பட 18 பேரை கட்சியை விட்டு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால் வர்த்தக அணி செயலாளர் வெங்கட்ராமன், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், தேனி மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத் எம்.பி, ப.ஜெயபிரதீப், செய்தி தொடர்பாளர்கள் கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் வைரமுத்து, பேரவை துணைச்செயலாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல செயலாளர் வினுபாலன், எம்ஜிஆர் இளைஞர் அணிச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தென் சென்னை தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சைதை பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் அஞ்சுலட்சுமி ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அவர்களுடன் கழக உடன்பிறப்புகள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது" என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in