தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா, பழனிசாமி உள்ளிட்ட 16 பேர் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டு துறை கூடுதல் செயலாளராக அதுல்ய மிஸ்ரா, வீட்டு வசதி துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, பேரூராட்சிகள் இயக்குநராக கிரண் குராலா, உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிச்சாமி, வீட்டு வசதி துறை துணைச் செயலாளராக ஹித்தேஷ் குமார் என பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in