ஆளுநர் மீது 15 பக்க பரபரப்பு புகார் கடிதம்: ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பினார்!

ஸ்டாலின், ஆர்.என்.ரவி
ஸ்டாலின், ஆர்.என்.ரவிஆளுநர் மீது 15 பக்க பரபரப்பு புகார் கடிதம்: ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பினார்!

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு 15 பக்க கடிதத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிக்கையை வெளியிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வதை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்தார்.இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாட்டில் தற்போது நிலவக்கூடிய அரசியல் சூழல், தமிழக அரசுடன் ஏற்பட்டு வரும் மோதல் போக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி விவாதித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ரவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு 15 பக்க புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் புகார் அளித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட மசோதாக்கள் நிலுவை, முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட ஆளுநரின் செயல்பாடுகளும் கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in