நாளை முதல் 9 நாட்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

நாளை முதல் 9 நாட்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில்  144 தடை உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் 9 நாட்களுக்கு144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் முன்னோடி போராளியாகத் திகழ்ந்தவர்கள் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள். ஆங்கிலேய கம்பெனியரை தமிழகத்தில் இருந்து விரட்ட 1785-ம் ஆண்டு முதல் 1801-ம் ஆண்டு இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினர். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்து குழுக்களையும் ஒன்று திரட்ட முயன்றனர். இதனால், ஆங்கிலேய கம்பெனியரால் இவர்கள் குறிவைக்கப்பட்டனர்.

சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இவர்கள் இவரும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக். 24-ம் தேதி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது.

மருதுபாண்டியர்களின் குருபூஜை அக்., 27 ம் தேதி காளையார்கோவிலில் நடைபெற உள்ளது. அக்.30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இந்த நிலையில், சிவகங்கையில் நாளை (அக்.23) முதல் 9 நாட்கள் (அக்.31) 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in