ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மனைவி, முன்னாள் முதல்வரின் செயலர் மகளின் 14.23 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மனைவி, முன்னாள் முதல்வரின் செயலர் மகளின் 14.23 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஓய்வுபெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி மற்றும் முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகள் ஆகியோருக்குச் சொந்தமான 14.23 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர் மற்றும் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளருமான ராஜமாணிக்கத்தின் மகள் துர்கா சங்கர் ஆகியோருக்குச் சொந்தமான 14.23 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை 14.26 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in