இன்னும் 14 நாட்கள் கோத்தபய ராஜபக்ச இங்கே தங்கலாம்: சிங்கப்பூர் அரசு விசா நீட்டிப்பு

இன்னும் 14 நாட்கள் கோத்தபய ராஜபக்ச இங்கே தங்கலாம்: சிங்கப்பூர் அரசு விசா நீட்டிப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் சிங்கப்பூர் விசா மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மக்கள் புரட்சி ஏற்பட்டது. இதனால், இலங்கையில் இருந்து மாலத்தீவு வழியாக விமானம் மூலம் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் தப்பிச் சென்றார். அவருக்கு அந்நாட்டு அரசு 14 நாள் சுற்றுப்பயண விசா வழங்கியது.

அத்துடன், "கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரில் அடைக்கலம் நாடவில்லை. சிங்கப்பூர் அவருக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை" என்று சிங்கப்பூர் அரசு விளக்கமளித்திருந்தது. மேலும், ராஜபக்ச தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் வந்திருந்ததாகவும் கூறப்பட்டது. ஜூலை 14-ம் தேதி சிங்கப்பூர் வந்த கோத்தபயவின் விசா நாளையோடு முடிவடைகிறது.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்று இலங்கை அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியிருந்தார். இதன் காரணமாக சிங்கப்பூரிலிருந்து கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கோத்தபயவின் விசாவை மேலும் 14 நாட்கள் நீட்டித்து சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in