தெலங்கானாவில் 12 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா: பரபரப்பு குற்றச்சாட்டு

தெலங்கானாவில் 12 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா: பரபரப்பு குற்றச்சாட்டு

தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 12 முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மூத்த கட்சி நிர்வாகிகளை விட, பிற கட்சியிலிருந்து வந்த தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி தெலங்கானாவைச் சேர்ந்த 12 முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

ராஜினாமா செய்த தலைவர்கள் தங்கள் கடிதங்களில், "முதல்வர் சந்திரசேகர ராவ் மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். கேசிஆரை பதவி நீக்கம் செய்ய வலுவான போராட்டம் தேவை" என தெரிவித்தனர். இது கடந்த 6 ஆண்டுகளாக காங்கிரஸில் பணியாற்றிய தலைவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர். ராஜினாமா செய்த உறுப்பினர்களில் தெலுங்கானா எம்எல்ஏ சீதக்காவும், முன்னாள் எம்எல்ஏ ராம் நரேந்தர் ரெட்டியும் அடக்கம்.

புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி காங்கிரஸில் இணைந்தவர்கள் என்று மக்களவை எம்பி உத்தம் குமார் ரெட்டி ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in