எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 கிலோ தங்கம், ரூ.84 லட்சம் பறிமுதல்

கிரிப்டோ கரன்சியில் ரூ.34 லட்சம் முதலீடு
எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 கிலோ தங்கம், ரூ.84 லட்சம் பறிமுதல்

எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 11 கிலோ தங்கம், ரூ.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் 11.153 கிலோ கிராம் தங்க நகைகள், 118.506 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கிரிப்டோ கரன்சியில் ரூ.34 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, செல்போன்கள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in