கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 109 பொருட்கள் பறிமுதல்: என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில்  109 பொருட்கள் பறிமுதல்: என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு விசாரணை என்ஐஏவிற்கு நேற்று மாற்றப்பட்டது. இந்த நிலையில் என்ஐஏ முதல் தகவல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், " கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை வந்த கார்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் பலியானார்.

அதன்படி, குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174ன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என ஜமேஷா முபின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜமேஷா முபின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில், 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொட்டாசியம் நைட்ரேட், கருப்பு பவுடர், 2 மீட்டர் நீளமுள்ள திரி, நைட்ரோ கிளிசரின், சிகப்பு பாஸ்பரஸ், சல்பர் பவுடர், இண்டன் கியாஸ் சிலிண்டர், கையுறை, இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என என்ஐஏ முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை வெடிபொருள் சட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க என்ஐஏ ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in