அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

``தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தினமும் பத்தாயிரம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன'' என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நிலையில்  இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை இயந்திரம் ஆகியவற்றை  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அறுவை சிகிச்சைகளை  டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்து 32 படுக்கைகளுடன் கூடிய ECRP-II தீவிர சிகிச்சை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த  நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், "அறுவை சிகிச்சைக்கான டிஜிட்டல் முறைகளை சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முழுவதும் 1649 டிஜிட்டல் முறைகளை சரிபார்க்கும் தொழில்நுட்பம் அமைக்கப்படும். விரைவில் திருச்சியில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். இதற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்படும். 

வரும் நிதிநிலை அறிக்கையில்  திருச்சியிலும் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்படும்.  வீராங்கனை பிரியா இறப்பு விவகாரத்தில் விசாரணைக்குழு விசாரித்து அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது . உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் எப்போதும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். எல்லா நேரங்களிலும் தவறுகள் நடப்பதில்லை" என குறிப்பிட்டார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in