குடும்பத் தலைவிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்... காங்கிரஸின் அசத்தல் வாக்குறுதி!

குடும்பத் தலைவிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்... காங்கிரஸின் அசத்தல் வாக்குறுதி!

காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும் என்றும், 1.05 கோடி குடும்பங்களுக்கு 500 ரூபாய்க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் எனவும் அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் வாக்குறுதி அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், அங்கே ஆட்சியை கைப்பற்ற பாஜக கடுமையாக போராடி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in