பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது?: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசுபெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது?: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழகத்தில் மூன்று மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுப் பெண்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் கொடுக்கும் நிகழ்வு நடந்தது.

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு சான்றிதழ் வழங்கி பேசுகையில், “திராவிட மாடல் அரசின் உன்னத திட்டம், மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் வழங்குவது. அது இன்னும், 3 அல்லது மாதங்களில் வழங்ககக்கூடிய நாள்வரும். இந்த தமிழ் மண்ணில் மங்கையராகப் பிறந்ததற்கே மாதம் ஆயிரம் வழங்கும் அற்புதத் திட்டம் அது. ஏற்கெனவே மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், பெண் மாணவிகளுக்கு உதவித்தொகை என அற்புதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது திராவிட மாடல் அரசு.

நம் தமிழகம் இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் இந்திய நாட்டின் முதுகெழும்பே விவசாயம் தான். தமிழகத்திலும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் ”என்றார். இந்நிகழ்ச்சியில் 179 மகளிர் குழுக்களைச் சேர்ந்த 1777 பேருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in