10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள டிவிஎஸ் நகர் பாலப்பணியை 18 மாதங்களில் முடிப்பேன்: சவால் விடும் நிதி அமைச்சர்

10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள டிவிஎஸ் நகர் பாலப்பணியை 18 மாதங்களில் முடிப்பேன்: சவால் விடும் நிதி அமைச்சர்

மதுரை டிவிஎஸ் நகரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவடையாமல் நிலுவையில் உள்ள மேம்பாலப்பணியை 18 மாதங்களுக்குள் நிறைவேற்றுவேன் என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரையை தென்மாவட்டங்களுடன் இணைக்கும் ஜிஎஸ்டி சாலைக்குச் செல்லும் டிவிஎஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம் இணைப்பாக டிவிஎஸ் நகர் ரயில்வே மேம்பாலம் உள்ளது. நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் மத்திய தொகுதிக்குள் வரும் இந்த பாலக் கட்டுமானப்பணி, கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்தப் பாலம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து டிவிஎஸ் நகருக்கு நேராகவும், இடதுபுறமாக ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம், சுப்பிரமணியபுரம் பகுதிகளை இணைக்கும். இதில் டிவிஎஸ் நகர் செல்லும் பாதை கட்டிமுடித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே போக்குவரத்து பயன்பாட்டுக்காகத் திறந்து விடப்பட்டது.

ஆனால், ஜெய்ஹிந்த்புரம் திரும்பக்கூடிய பக்கத்தில் சிறிதளவு கட்டப்பட்டு அப்படியே பாலப்பணிகள் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த இணைப்பு பாலப்பணிகளுக்கான பூமி பூஜைக்கு இன்று அடிக்கல் நாட்டும் பணியை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று தொடக்கி வைத்தார். 16 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் 251 மீட்டர் நீளம் கொண்டதாக இந்த இணைப்புப்பாலம் அமைய உள்ளது. இந்தப் பாலம் கட்டுமானப் பணிகளை அடுத்து வரும் 18 மாதங்களுக்குள் நிறைவேற்றுவேன் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in