
புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குபடி முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட பரிசீலிக்குமாறு புதுச்சேரி முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடஒதுக்கீடை உடனடியாக நடைமுறைப்படுத்த புதுச்சேரி முதல்வர்ரங்கசாமி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், ஆளுநரின் இந்த பரிந்து கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் ஆளுநர் அப்போது ஒப்புதல் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் மருத்துவப்படிப்பில் சேரும் நிலை உள்ளது அதனை மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த இடஒதுக்கீடு அமைச்சரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
" அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவக்கல்வி வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் உள் ஒதுக்கீடு கொண்டுவருகிறோம். அதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த உள் ஒதுக்கீட்டைச் சட்டமாக கொண்டு வராமல் ஆணையாக வெளியிட முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஆளுநர் அனுமதி தராவிட்டால், அதை எதிர்த்துப் போராடவும் தயாராக இருக்கிறோம்" என அப்போதைய முதல்வர் நாராயணசாமி கூறியது குறிப்பிடத்தக்கது.