வேட்பாளருக்கு பஞ்சம்... 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி!

கரும்பு விவசாயி சின்னமும் சீமானும்
கரும்பு விவசாயி சின்னமும் சீமானும்

சீமான் வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தமிழ்நாட்டில் 22 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் 17 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட போது, அவர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் பொதுச்சின்னமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் அதே சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால், தாமதமாக விண்ணப்பித்ததால், அந்த சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஒலிவாங்கி (மைக்) சின்னத்துடன்  சீமான்
ஒலிவாங்கி (மைக்) சின்னத்துடன் சீமான்BG

இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இதையடுத்து தற்போது நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்ட பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தது. மிக தைரியமாக சீமான் கட்சியையும் தங்களோடு கூட்டணிக்கு அழைத்தது அந்தக் கட்சி.

இப்படி எல்லாம் பில்டப் கொடுத்த அந்தக் கட்சி இப்போது தமிழகத்தில் 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் ஜெயக்குமார், ”தமிழ்நாட்டில் 22 தொகுதிகளில் வேட்பாளர்கள் கிடைக்காததால் 17 தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடுகிறோம்” என தெரிவித்தார்.

சீமான்
சீமான்

இதனிடையே, தங்களுக்கு வழங்கப்பட்ட ஒலிவாங்கி சின்னத்தை இன்று அறிமுகப்படுத்தி வைத்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதை தடை செய்ய வேண்டும். அனைவருக்கும் எண்கள் ஒதுக்கப்பட்டு, அந்த எண்களுக்கு மக்கள் வாக்களிக்கும் முறை வர வேண்டும். பாஜகவுக்கு தேசிய மலரான தாமரை சின்னம் தொடர்ந்தால், எங்களுக்கு தேசிய விலங்கான புலி அல்லது தேசிய பறவையான மயில் சின்னங்களை ஒதுக்க வேண்டும் என தேர்தலுக்கு பின்னர் வழக்கு தொடருவோம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...  


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in