
பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றியே தீரவேண்டும் என தமிழக பாஜகவில் இருக்கும் 80 சதவீதத்துக்கும் அதிகமான முக்கியஸ்தர்கள் டெல்லி தலைமைக்கு பிரஷர் கொடுக்கிறார்களாம். தமிழக பாஜக தலைவர்கள் சிலரது ஆடியோ, வீடியோ விவகாரங்கள் அண்ணாமலையின் கையில் சிக்கி இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
திமுக அரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை எடுத்துவைத்து வரும் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மறைமுக நட்பில் இருப்பதாகவும் சிலர் வதந்தி பரப்புகிறார்களாம். அண்ணாமலைக்கு எந்தளவுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகனுக்கு எதிராகவும் இருக்கிறதாம்.
எனவே, இரண்டு தலைகளையும் தூக்கிவிடும் திட்டத்தில் பாஜக தலைமை இருப்பதாக ஒரு பேச்சு ஓடுகிறது. இது அவ்வப்போது கிளம்பி அடங்கும் செய்திதான் என்றாலும் இந்தமுறை நிச்சயம் இது நடந்தே தீரும் என்று கமலாலயம் தரப்பில் சொல்கிறார்கள். அண்ணாமலைக்குப் பதிலாக வேறு யாரை தலைவராக்கலாம் என்ற பரிசீலனை பட்டியலில் முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் பெயர் முதலாவதாக இருக்கிறதாம்!