ஜெயக்குமார் விடுதலையானபோது...
ஜெயக்குமார் விடுதலையானபோது...

ஜெயக்குமாரை வீட்டுக்கு அழைக்கத் தயங்கும் திருச்சி அதிமுக விஐபி-க்கள்!

காரணம் என்ன?

நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 -ம் தேதி, முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், திருச்சியில் தங்கியிருந்து தினமும் கன்டோன்மென்ட் கால நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் அவருக்கு நிபந்தனை விதித்தது.

இதையடுத்து புழல் சிறையிலிருந்து மார்ச் 12-ம் தேதி காலையில் விடுதலையான ஜெயக்குமாரை கட்சியின் ஒருங்கிணைப் பாளர்களான ஓபிஏஸ், ஈபிஎஸ் இருவரும் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு திருச்சிக்கு புறப்பட்ட ஜெயக்குமார், கடந்த 10 நாட்களாக திருச்சியில் தங்கி இருந்து நிபந்தனை ஜாமீன் கையெழுத்துப் போட்டு வருகிறார்.

திருச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிளாஸம் ஓட்டலில் அறை எண் 303- தங்கி இருக்கும் ஜெயக்குமாருக்கு தேவையான வசதிகளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி உள்ளிட்டோர் கவனித்து வருகிறார்கள்.

வழக்கமாக, அதிமுக விஐபி-க்கள் வந்தால் தங்களது இல்லத்துக்கே அழைத்து தடபுடல் விருந்து படைக்கும் இவர்கள், ஜெயக்குமாரை அப்படி வீட்டுக்கு அழைக்காமல் அவர் தங்கியிருக்கும் விடுதிக்கே உணவைச் சமைத்து அனுப்பிவிடு கிறார்களாம். ஜெயக்குமாரை வீட்டுக்கு அழைத்து தடபுடல் நடத்தி ஆளும் கட்சியின் ஆக்ரோஷப் பார்வைக்கு நாமும் ஆளாக வேண்டாம் என்பதும் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

இதனால் ஊருக்கு வெளியே தோப்புகளில் ஜெயக்குமாருக்கு கறிவிருந்து சமைத்துப் போடுகிறார்களாம். நேற்று (ஞாயிறு) மதியம் பரஞ்சோதி தனது ஏரியாவுக்குள் வரும் புளியஞ்சோலையில் கடாவெட்டி ஜெயக்குமாருக்கு விருந்து போட்டார். பாக்கும் தென்னையும் வளர்ந்த அந்தத் தோப்பில் ஐந்தாறு கட்டில்களும் போட்டிருய்தார்களாம். விருந்து சாப்பிட்டுவிட்டு சட்டையைக் கழற்றிய ஜெயக்குமார், கட்டிலில் படுத்து ஆழ்ந்த உரக்கம் போட்டுவிட்டு சாவகாசமாக விடுதிக்குத் திரும்பினாராம். இதைத் தொடர்ந்து இன்று (திங்கள்) திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ப.குமாரும் ஜெயக்குமாருக்கு மணப்பாறை அருகே தென்னந் தோப்பில் கடாவெட்டி கறிவிருந்து வைத்தார்.

முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் ஜெயக்குமாரை வீட்டுக்கு அழைக்க பம்மினாலும் திருச்சி முன்னாள் துணை மேயரான சீனிவாசன் மட்டும் எதற்கும் பயப்படாமல் ஜெயக்குமாரை தனது வீட்டுக்கே அழைத்துச் சென்று தடபுடல் விருந்து வைத்து அசத்தினாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in