கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

கருத்துச் சொன்னதால் கார்த்தியைக் காய்ச்சி எடுக்கும் காங்கிரஸ்காரர்கள்!

“கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரைதான் காரணம். கர்நாடகத்தின் வெற்றி ராகுல் காந்தியை பிரதமர் நாற்காலியில் அமரவைப்பதற்கான முன்னோட்டம்” என்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால், “கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமையும் என நான் கருத்துச்சொல்ல மாட்டேன். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் நிச்சயமாக எங்களுக்கு பூஸ்ட் தான். ஆனால், இதையே வெச்சுக்கிட்டு மற்ற மாநில தேர்தல்களிலோ, மத்தியில் நடக்கும் தேர்தலிலோ இதே முடிவு இருக்கும் என்று சொல்ல இன்றைக்கு நான் தயாராக இல்லை” என்று காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் கருத்துச் சொல்லி இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி இருக்கிறது.

இதை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்ட கார்த்தி எதிப்பாளர்கள், “கை சின்னத்தில் வெற்றிபெற்ற உங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்று சொல்வதற்கு என்ன தயக்கம்? இதற்குப் பேசாமல் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுங்கள்” என்று தொடங்கி சமூகவலைதளங்களில் கடுமையாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கு எதிர்வினையாற்றி வரும் கார்த்தி விசுவாசிகளோ, “இளையநிலா கார்த்தி பேசிய வீடியோவை முழுமையாக பார்க்காமல் அரைகுறையாகப் பார்த்துவிட்டு அரைவேக்காட்டுத் தனமாக விமர்சனம் செய்யாதீர்கள்” என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in