அடுத்த தேர்தலில் பாத்துக்கலாம் என சொன்னார்கள்... அதிமுகவோடு சமாதானம் ஆன புரட்சி பாரதம்!

எடப்பாடி பழனிசாமி பூவை ஜெகன்மூர்த்தி
எடப்பாடி பழனிசாமி பூவை ஜெகன்மூர்த்தி

மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்யாததால் புரட்சிபாரதம் கட்சி அதிமுக மீது அதிருப்தியில் இருந்தது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல் கட்சியாக புரட்சி பாரதம் கட்சி இணைந்தது. அதிமுகவை முற்றிலும் ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்தார். மேலும் புரட்சி பாரதம் நடத்திய மாநாட்டிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கூட்டணியை உறுதி செய்தார்.

இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இதுகுறித்து சில கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்தன.

எடப்பாடி பழனிசாமி பூவை ஜெகன்மூர்த்தி
எடப்பாடி பழனிசாமி பூவை ஜெகன்மூர்த்தி

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டின்படி தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி(தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற 33 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் புரட்சி பாரதம் கட்சிக்கு மக்களவைத் தொகுதியில் ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதனால் புரட்சி பாரதம் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

அதிமுகவின் இந்த முடிவால் ஏமாற்றமடைந்த பூவை ஜெகன்மூர்த்தி, "ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த புரட்சி பாரதம் கட்சிக்கு கடைசியாக ஏமாற்றம் கிடைத்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே பேசும்போதே சீட் இல்லை என்று கூறி இருந்தால் மனம் ஆறியிருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் கை விரித்த காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் புரட்சி பாரதம் கட்சியினர் கொந்தளிப்போடு, ஏமாற்றத்தோடு உள்ளனர்” என்று தெரிவித்தார். மேலும், புரட்சி பாரதம் கட்சி அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவந்தது. இதனால் அக்கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

எடப்பாடி பழனிசாமி பூவை ஜெகன்மூர்த்தி
எடப்பாடி பழனிசாமி பூவை ஜெகன்மூர்த்தி

இந்நிலையில், இன்று பூந்தமல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பூவை ஜெகன்மூர்த்தி, "அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்தனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். தொண்டர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவுடன் தொடரலாம் என கூறியதால் அதில் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.அதிமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாக பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இணைந்த காரணத்தால் வடமாவட்டங்களில் அதிமுகவுக்கு கணிசமான ஆதரவு கிடைக்கும் என அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in