நிழற்சாலை

நிழற்சாலை

வேடிக்கை

பரந்த உலகம்
நீண்ட பயணம்
குறுகிய மனங்கள்
சாதிக்கத் துடிக்கும் உலகம்
சாதித்து சலிக்காத மனிதங்கள்
சாதித்துவிட்டதாய் சில இறுமாப்புகள்
ஒற்றைப் புள்ளியில் சுழலும் பூமி
ஓய்ந்துவிடாத மானுடம்
தாய்மைக்கு தலை வணங்கும் குணங்கள்
தறிகெட்டுச் சுற்றும் பாலியல் வன்மங்கள்
ஈகை கொண்ட உள்ளங்கள்
இறை நிறந்த பல நெஞ்சங்கள்
அடித்துப்பிடுங்கும் சில அவலங்கள்
இறைவனுக்கும்
பக்தனுக்கும் இடையில்
பகிர்ந்துகொள்ள இடைத்தரகர்கள்
பரிதவிப்பில் இறைவன்
கலங்கிய குட்டைகள்
கவலை தோய்ந்த அயிரைகள்
காத்திருக்கும் கொக்குகள்
தெளிந்தும் தெளியாத பல கனவுகள்
உள்ளே கடவுள்
வெளியே பிச்சைக்காரன்
வீதியில் நிற்கிறது இறை
எல்லாம் வேடிக்கை
எதிலும் வேடிக்கை
விதியை நொந்து வாழ்க்கை
பயணங்கள் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.
- தஞ்சைத்தரணியன்

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.