தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் - அட்டகாசமான புகைப்படங்கள்!

தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் - அட்டகாசமான புகைப்படங்கள்!

2005ம் ஆண்டில் இந்தி சினிமாவில் அறிமுகமாகி 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக திரைப்பயணத்தை தொடர்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் ரவிகிருஷ்ணா நடித்த ‘கேடி’ படம் மூலமாக அறிமுகமானார். அதன்பின்னர் ‘கல்லூரி’ திரைப்படம் இவருக்கு நல்லப் பெயரை வாங்கிதந்தது.

தனுஷ் நடித்த ‘படிக்காதவன் ‘ மூலமாக ரசிகர்களிடம் பிரபலமான தமன்னா, அடுத்ததாக சூர்யாவுடன் ‘அயன்’, விஜயுடன் ‘சுறா’, கார்த்தியுடன் ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். அதன்பின்னர் அஜித்தின் ‘வீரம்’,விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ படங்களில் நடித்தது இவருக்கு புகழ் பெற்றுக்கொடுத்தது. இந்திய சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘பாகுபலி’ யின் இரண்டு பாகங்களிலும் நடித்து இந்திய சினிமா முழுவதும் பிரபலமானார் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட திரைப்படங்களில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in