சூர்யா ஜோதிகாவின் அன்பு ததும்பும் புகைப்படங்கள்: தேசிய விருது விழா ஆல்பம்!

சூர்யா ஜோதிகாவின் அன்பு ததும்பும் புகைப்படங்கள்: தேசிய விருது விழா ஆல்பம்!

‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக தேசிய விருதினைப் பெற்ற கலைஞர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் வந்து அசத்தினார்கள்.

2020 ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சூர்யா, ஜோதிகா, ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, சுதா கொங்கரா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. வேட்டி சட்டையுடன் விழாவுக்கு வந்திருந்த சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார். பட்டுச்சேலையில் வந்திருந்த ஜோதிகா சிறந்த திரைப்படத்துக்கான விருதினை பெற்றார். சூர்யா விருது பெறும்போது ஜோதிகாவும், ஜோதிகா விருது பெறும்போது சூர்யாவும் அதனை உற்சாகத்துடன் மொபைலில் படம் எடுத்தனர். இந்த விழாவில் இவர்களின் அன்பு ததும்பும் புகைப்படங்கள்தான் இப்போது இணையத்தில் வைரல்...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in