
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...
கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கிய ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் அவரின் தங்கையாகவும் நடித்தார். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘மகாநதி’யில் நடித்ததற்காக இவர் தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரு பாட்டா’ படத்தில் படு கவர்ச்சியாக நடித்து மாஸ் காட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் கவர்ச்சியாக பல போட்டோஷூட்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில்தான் ஓணம் பண்டிகையையொட்டி கேரள பாரம்பரிய உடையுடன் இருக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.