1967-ல் சென்னை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கக் காரணமாக இருந்த அரிசி, சென்னையில் பிளாட்பாரத்தில் விற்கப்படும் காட்சி. அந்தக் காலகட்டத்தில் ரேஷன் கடையில் பச்சரிசி, புழுங்கலரிசி கிடைக்கவில்லை. ஆனால், வெளிச் சந்தையில் அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டது. 1970-களில் நிகழ்ந்த பசுமைப் புரட்சியின் விளைவாக அரிசி பற்றாக்குறை நிரந்தரமாக நீங்கியது.
படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்