தமிழிலும் தடம் பதிக்கிறது `ஆஹா' ஓடிடி தளம்

தமிழிலும் தடம் பதிக்கிறது `ஆஹா' ஓடிடி தளம்

ஓடிடி தளங்களின் வருகையை அடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓடிடி தளங்கள் அதிகம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அந்தவகையில் தெலுங்கு திரையுலகுக்கு என அல்லு அர்ஜுன் குடும்பத்தின் சார்பில் உருவான “ஆஹா” என்ற ஓடிடி தளம் தமிழிலும் தடம் பதிக்க உள்ளது.

இந்த ஆஹா ஓடிடி தளத்தை தமிழில் மேலும் பிரபலமடைய செய்யும் நடவடிக்கையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. அதன்படி, ஆஹா ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் சிம்பு இணைந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் கலைஞர் அங்கீகாரம் என்றொரு விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், ஏவிஎம் பாலசுப்பிரமணியன், மறைந்த இயக்குநர் பாலசந்தர், நடிகை ஸ்ரீதேவி, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கவுரவிக்கப்படுகின்றனர். மறைந்தவர்கள் சார்பில் அவரது உறவினர்கள் விருதை பெறுகின்றனர்.

Related Stories

No stories found.