`ஷரத் என்னை மன்னித்து விடு'- `குக் வித் கோமாளி'யிலிருந்து வெளியேறிய சந்தோஷ் நெகிழ்ச்சி

`ஷரத் என்னை மன்னித்து விடு'- `குக் வித் கோமாளி'யிலிருந்து வெளியேறிய சந்தோஷ் நெகிழ்ச்சி

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து எலிமினேட் ஆன சந்தோஷ் இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சின்னத்திரை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சமைக்க தெரிந்த சமையல் கலைஞர்கள், சமைக்க தெரியாமல் காமெடியில் கலகலக்கும் கோமாளி என இந்த இருவர் இணைந்து சமைத்தால் களை கட்டும் சிரிப்பு தான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.

சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, ஷரத், பாலா, புகழ் என கோமாளிகள் வழக்கம் போல இந்த சீசனிலும் களம் இறங்க மனோபாலா, அந்தோணி தாசன், ‘சார்பட்டா’ சந்தோஷ், ரோஷினி, அம்மு அபிராமி, வித்யுலேகா என பலரும் சமையல் கலைஞர்களாக இந்த சீசனில் உள்ளனர். வழக்கம் போல செஃப் தாமு, வெங்கடேஷ் பட் நிகழ்ச்சி நடுவர்களாக இருக்க ரக்‌ஷன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோட்டில் இருந்து சந்தோஷ் எலிமினேட் ஆகி இருக்கிறார். நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆனதும் ‘குக் வித் கோமாளி’ செட்டில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில், ‘குக் வித் கோமாளி-சீசன்3’ எலிமினேஷன் நாள் இன்று. நான் எலிமினேட் ஆகி இருக்கிறேன். ஆனால், இது எனக்கு நினைவில் இருக்கக்கூடிய ஒரு தினம். அதனால், இதை வீடியோவாக பதிவு செய்கிறேன். சின்ன வயதில் விடுமுறைக்காக ஊருக்கு சென்று திரும்பும்போது, ‘ஏன் கிளம்புகிறோம்?’ என்ற ஒரு எண்ணம் இருக்கும் இல்லையா? அது போல தான் இப்போது உணர்கிறேன். ஆனாலும் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கிறது.

இங்கு இருக்கும் அனைவரும் எனக்கு குடும்பம் போல, அவர்கள் இருந்து சமைப்பதில் எனக்கு மகிழ்ச்சி. என்னால் யாரும் எலிமினேட் ஆகவில்லை. நான் போகும் போது இந்த முறை ஷரத்துக்கு பரிசு வென்று கொடுத்திருக்கிறேன். ஆனால், என்னால் அவர் எலிமினேட் ஆனதுக்கு ஷரத்திடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி. செஃப் சொல்வது போல, ‘இதுவும் கடந்து போகும்’. சமையல் என்னுடைய தொழில் இல்லை. ஆனால், என்னால் முடிந்த அளவுக்கு இதில் முயற்சி செய்து சிறந்ததை தான் கொடுத்தேன்.

ஒரு வேளை நான் அடுத்து வைல்ட் கார்ட்டில் வரும் வாய்ப்பு இருந்தால் நிச்சயம் இன்னும் நன்றாக கற்று கொண்டு வருவேன். இதில் இருந்து வெளியேறுவதால் அதற்கு பதில் நிச்சயம் நிறைய நல்ல படங்களை கொடுப்பேன். உங்களை எல்லாரையும் மிஸ் செய்வேன்’ என அந்த வீடியோவில் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார் சந்தோஷ்.

‘சார்பட்டா’ படம் மூலமாக புகழ்பெற்ற சந்தோஷ் தற்போது த்ரிஷா நடிக்கும் ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.