பலான படங்களுக்கு பிரபலமான ULLU ஓடிடி தளம்... பக்திமணம் பரப்பும் புதிய தளத்தையும் தொடங்குகிறது

உள்ளு - ஹரி ஓம்
உள்ளு - ஹரி ஓம்

இந்தியாவில் வயது வந்தோருக்கான படைப்புகளை படையலிடும் ’உள்ளு’ ஓடிடி தளம், தன் மீதான கறையை கழுவ பக்திமணம் பரப்பும் புதிய ஓடிடி சேவையை அடுத்த மாதம் தொடங்குகிறது.

’உள்ளு’ ஓடிடி தளம் மீதான காவல்துறை புகார்கள், நீதிமன்ற வழக்குகள் ஏராளம். இந்தியாவின் கலாச்சாரத்தை கெடுப்பதாகவும், இளம் வயதினரை குறிவைத்து பாழாக்குவதாகவும் அதன் மீதான குற்றச்சாட்டுகள் நீண்டவை. அந்தளவுக்கு இந்தியாவில் ஓடிடி தளங்களுக்கான அத்தனை சுதந்திரங்களையும் பயன்படுத்தி, பலான படங்களை பன்மொழிகளில் படையலிட்டதில் உள்ளு விரைவில் பிரபலமானது.

உள்ளு தளத்தின் உள்ளடக்கம்
உள்ளு தளத்தின் உள்ளடக்கம்

இதன் தாக்கத்தால் இதே பாணியில் பல ஆபாச ஓடிடி தளங்கள் உருவாகவும் காரணமானது. நீதிமன்றம் பலமுறை குட்டியும் உள்ளு தளமும் அதன் நிர்வாகமும் திருந்தியபாடில்லை. வயதுவந்தோர் ஓடிடி தளங்கள் மற்றும் அதற்கான நடிகர் நடிகையர் என தனி வர்த்தகத்தையும் உள்ளு உருவாக்கியது. இதனிடையே உள்ளு தன் மீதான பழியை போக்கவும், பிராயசித்தம் தேடும் நடவடிக்கையாகவும் பக்தி மணம் பரப்பும் ஆன்மிக ஓடிடி தளம் ஒன்றை அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

’உள்ளு’ நிறுவனர் விபு அகர்வால் தனது ’ஹரி ஓம்’ என்ற பெயரிலான ஸ்ட்ரீமிங் தளத்தை தொடங்குவதை உறுதி செய்துள்ளார். புதிய ஓடிடி தளமானது, மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு கலாச்சார மற்றும் மத உள்ளடக்கத்தை தொடர்களாக வெளியிட இருக்கிறது. இந்த ஓடிடி தளம் வீடியோ மற்றும் ஆடியோ வடிவங்களில் பஜனைகளையும் வழங்கும். குழந்தைகளுக்காக, புராணக் கதைகளில் அனிமேஷன் செய்யப்பட்ட உள்ளடக்கமும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி “இந்தியர்களாகிய நாம், நமது வேர்கள், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அறிந்துகொள்வது அவசியம். இந்த பயன்பாட்டில் முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய புராண மற்றும் மத உள்ளடக்கம் மட்டுமே இடம்பெறும். மூத்த குடிமக்கள் மற்றும் இளைய பார்வையாளர்கள் நமது இந்திய புராணங்களை மேலும் ஆராய வேண்டும் என்ற நோக்கத்தில் ’ஹரி ஓம்’ தளத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று விபு அகர்வால் கூறியுள்ளார்.

’உள்ளு’வில் தொடங்கிய விபு அகர்வாலின் ஓடிடி முயற்சியில் இது மூன்றாவது ஸ்ட்ரீமிங் தளமாகும். அட்ராங்கி என்ற பெயரில் முன்னதாக இவர் ஆரம்பித்த தொலைக்காட்சி சேனல் தோல்வியடைந்ததில் அதனை ஓடிடியாக மாற்றினார். தற்போது ஹரி ஓம் ஆன்மிக தளம் மூலம் மூன்றாவது ஓடிடி தளத்தை வெளியிடுகிறார்.

விபு அகர்வாலின் இந்த திடீர் மாற்றத்துக்கு, அவர் தனது லாபம் கொழிக்கும் ’உள்ளு’ பெயரில் ஐபிஓ வெளியீட்டுக்கான முயற்சிகளே காரணம் என சொல்லப்படுகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனமாக உள்ளு மாறியதும், அதன் உள்ளடக்கத்தை சர்வதேச சந்தைக்கு நிகராக பிரம்மாண்டம் காட்டவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும் திட்டமிட்டிருக்கிறார். உள்ளு நிறுவனரின் உள்நோக்கம் சர்ச்சைக்கு ஆளாகவும் வாய்ப்பிருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in