கமல்ஹாசனின் பிக்பாஸ் முடிவு: ஓடிடி-க்கு முற்றும்; டிவி-க்கு தொடரும்!

கமல்ஹாசனின் பிக்பாஸ் முடிவு: ஓடிடி-க்கு முற்றும்; டிவி-க்கு தொடரும்!
பிப்.20 பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீஸன்களை நடிகர் கமல்ஹாசன் சுவாரசியமாக தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் பிக்பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சியை நிறைவு செய்தவர், தொடர்ந்து அதன் ஓடிடி பதிப்பிலும் களமிறங்கினார்.

டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் பிக்பாஸின் ஓடிடி பதிப்பு, 24 மணி நேர லைவ் நிகழ்வாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம்போல இதனையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், தற்போது அதிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ’ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விக்ரம் திரைப்பட பணிகளின் தேதிகளும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான தேதிகளும் குறுக்கிடுவதால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும், பிக்பாஸ் 6வது சீசனில் சந்திப்போம் என்பதையும் விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதாவது பிக்பாஸின் ஓடிடி பதிப்பிலிருந்து விலகுவதாகவும், டிவியில் ஒளிபரப்பாக உள்ள அடுத்த சீஸனில் தொடர்வதாகவும் கமல் விளக்கமளித்துள்ளார்.

இதன் மூலம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து இன்றோடு(பிப்.20) கமல்ஹாசன் வெளியேறுவது உறுதியாகி உள்ளது. ஆனால் கமலின் விலகலால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு கமல் அறிக்கையின் வாசகங்கள் அமைந்துள்ளன. இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வரவேற்பு குறையுமா, அடுத்த தொகுப்பாளர் யார், கமல் இல்லாத குறையை நிரப்ப பிக்பாஸ் அல்டிமேட் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதான கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.