‘பிக் பாஸ் - நான்ஸ்டாப்’ வெற்றி: பிரமாதப்படுத்திய பிந்து மாதவி!

‘பிக் பாஸ் - நான்ஸ்டாப்’ வெற்றி: பிரமாதப்படுத்திய பிந்து மாதவி!

புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தியாவிலும் வெற்றிகரமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தமிழில் மொத்தம் ஐந்து சீஸன்கள் கடந்துள்ள இது ஓடிடி வடிவிலும் தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் என ஒளிபரப்பாகி கடந்த மாதத்தில் நிறைவடைந்தது.

தெலுங்கிலும் ஆறு சீஸன்களைக் கடந்து பிக் பாஸ் ஒளிபரப்பானது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது போல தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தொகுத்து வழங்கிவருகிறார். இந்த நிலையில் தமிழ் பிக் பாஸ் ஓடிடி போல தெலுங்கிலும் பிக் பாஸ் நான்ஸ்டாப் என ஓடிடி பார்வையாளர்களுக்காகப் பிரத்யேகமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட நடிகை பிந்து மாதவி போட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் 'பொக்கிஷம்' படம் மூலம் அறிமுகமான பிந்து மாதவி 'கழுகு', 'பசங்க 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தமிழின் பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு நான்காவது ரன்னர் அப்பாக வந்தார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு வெற்றிக் கோப்பை சாத்தியப்படவில்லை. ஆனால் இப்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்டு அங்கு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இறுதிச் சுற்றில், தகுதியான ஆறு போட்டியாளர்களில் ஒருவராக வந்த பிந்து மாதவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பிக்பாஸ் நான்ஸ்டாப் கோப்பை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றி குறித்து பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'இந்த வெற்றிக்காகத்தான் எந்தச் சூழ்நிலையிலும் நான் பின்வாங்கவில்லை. என்னைப் பற்றி இவ்வளவு நாட்கள் தேவையில்லாமல் வந்த எந்தக் குரல்களும் என்னை திசை திருப்பவில்லை. என் மீது செலுத்திய அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. உங்கள் இதயத்தில் எனக்கும் இடம் கொடுத்ததற்கு நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in