‘பிக் பாஸ் அல்டிமேட் வெற்றியை... பிரியமான ரசிகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்!’

பாலா நெகிழ்ச்சி
‘பிக் பாஸ் அல்டிமேட் வெற்றியை... பிரியமான ரசிகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்!’

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்று நடந்தது. சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் பாலா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் நிரூப்புக்கும், மூன்றாவது இடம் ரம்யாவுக்கும் கிடைத்தன. முதலிடம் வென்ற பாலாவுக்கு வெற்றிக்கோப்பையுடன் 35 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

நான்காவது சீஸனில் கலந்து கொண்டபோது பாலா இரண்டாவது இடம் பெற்றார். இந்நிலையில், இந்த சீஸனில் வெற்றி பெற்றது குறித்து மேடையில் பேசும் போது, “நான்காவது சீஸனில் கலந்துகொண்டபோது நான் வெற்றி பெற மாட்டேன் என்பது எனக்கு முன்பே தெரியும். உள்ளே வந்த குடும்பத்தினர் அது குறித்து சொல்லி விட்டார்கள். ஆனால், அப்போது நான் வெற்றி பெற வேண்டும் என ஓட்டு போட்ட என் ரசிகர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த அல்டிமேட் வெற்றியை என் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி முடித்து வெளியே வந்ததும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்திலும் வெற்றித் தருணங்களைப் புகைப்படங்களாகப் பகிர்ந்திருக்கும் பாலா, ‘என் தலைவன் பிக்பாஸ் ட்ராஃபியுடன் பிக் பாஸ் வெற்றியாளராக பொறுப்பேற்ற தருணம். கையில் கிடைத்தது தொலைந்தால் இன்னும் பிடிச்சது கிடைக்கும். பிக் பாஸ் அல்டிமேட்டில் 15 முன் அனுபவம் பெற்ற போட்டியாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இந்த வெற்றியை என் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். ஏதோ என்னால் முடிந்தது’ என அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

நான்காவது சீஸனில் இருந்தே ரம்யாவுடன் பாலாவுக்கு நல்ல நட்பு தொடர்கிறது. இந்த அல்டிமேட் சீஸனிலும் ரம்யா பங்கேற்றுள்ளார். அவருடனான புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘நீங்கள் எனக்கு உண்மையிலுமே கடுமையான போட்டியாளராக இருந்தீர்கள். நான்காவது சீஸன் ஆகட்டும் இப்போது அல்டிமேட் ஆகட்டும் இரண்டிலுமே உங்களது விளையாட்டுத் திறனையும் தெளிவையும் பார்த்து வியந்திருக்கிறேன். உங்களது திறமைக்கு எப்போதுமே மதிப்பளிக்கிறேன். உங்கள் விளையாட்டின் ரசிகன் நான்’ என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் பாலா.

Related Stories

No stories found.