
ஒட்டுமொத்தத் தமிழகத்தையே வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறார் ஆசிரியர் ஜி.பகவான். திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியரான இவர், வேறொரு பள்ளிக்குப் பணிமாறுதல் பெற்றிருந்தார். அதற்கான ஆணையை வாங்க வந்தவரை, மாணவர்கள் கட்டிப்பிடித்துக்கொண்டு “போக வேண்டாம் சார்...” என்று கதறி அழுதனர். மேலும், ஒருநாள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டமும் நடத்தினர்.
அந்த அளவுக்கு அவர்களது அன்பைப் பெற்றிருக்கிறார் பகவான். இந்தப் பாசப்போராட்டத்தை அடுத்து இவரது மாறுதல் உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறது அரசு. கண்டிப்பால் மட்டும் அல்ல... அன்பாலும் மாணவர்களை செதுக்கலாம் என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார் இந்தப் பாசக்கார பகவான்!
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.