பினராயி விஜயன் என் ரோல் மாடல்!- இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் அசத்தல்

பினராயி விஜயன் என் ரோல் மாடல்!- இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் அசத்தல்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

21 வயதிலேயே மேயராகி, இந்தியா முழுவதும் பேசப்படும் இளம் தலைவராகியிருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன். பாடப் புத்தகங்களைக் கையில் ஏந்தி வலம்வந்த ஆர்யாவிடம் மாநகராட்சி கோப்புகளைக் கொடுத்து அழகு பார்த்திருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. மேயர் பதவியில் இருந்துகொண்டே படிப்பைத் தொடரவும் இவர் திட்டமிட்டிருக்கிறார். பார்ப்பதற்குப் பக்கத்துவீட்டுப் பெண் போல இருக்கும் ஆர்யாவிடம் மிளிரும் அரசியல் தெளிவு நம்மை அசர வைக்கிறது. திருவனந்தபுரத்தின் மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ஆர்யா ராஜேந்திரனிடம் ‘காமதேனு’ மின்னிதழுக்காகப் பேசினேன்.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

மேயர் வேட்பாளராக என் பெயர் அறிவிக்கப்பட்டதுமே பலருக்கும் ஆச்சரியம். ஆனால், அந்த ஆச்சரியம் கட்சிக்குள் இருந்து வரவில்லை. கட்சிக்கு வெளியே இருந்துவந்ததுதான். ஏனென்றால், எங்கள் இயக்கத்தில் சாமானியர்களுக்கு உயர் பதவிகளைக் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. இங்கே குடும்பப் பின்னணியைவிட சிந்தாந்தமே முன்வரிசையில் நிற்கும். என் அப்பா எலெக்ட்ரீசியன். குடும்பப் பாரத்தைச் சுமக்க என் அம்மா ஆயுள் காப்பீட்டு முகவராக உள்ளார். அப்பா, அம்மா இருவருமே தீவிர இடதுசாரிச் சிந்தனையாளர்கள். அப்பா கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்கு என்னைக் கூட்டிப்போவார். அப்படித்தான் இடதுசாரிச் சிந்தனை என்னுள் வேரூன்றியது. என் அண்ணன் பொறியியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
    
முதல் அரசியல் கூட்டம் நினைவில் இருக்கிறதா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in