முத்திரை பதித்த மூத்த மாணவிகள்!

முத்திரை பதித்த மூத்த மாணவிகள்!

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ எனும் கூற்று எத்தனை முறை பயன்படுத்தப்பட்டாலும் தனது சாரத்தை இழக்காது. அந்த அளவுக்குக் கல்வியின் மேன்மையை உலகம் மதிக்கிறது. கல்வி பயில இதுதான் தகுந்த வயது எனும் பொதுவான பார்வையைத் தகர்த்தெறிந்துவிட்டு, முதுமைக் காலத்திலும் கல்வியில் சாதனை புரிபவர்களுக்கு இந்த உலகம் கூடுதல் மதிப்பை வழங்குகிறது. அப்படியான மதிப்பைப் பெற்றவர்கள்தான் கேரளத்தைச் சேர்ந்த, 96 வயது கார்த்திகாயினி அம்மாவும், 105 வயது பகீரதி அம்மாவும்!

மோடி தந்த மரியாதை

சமீபத்தில், தனது ‘மன் கீ பாத்’ உரையில், இவர்கள் இருவரது பெயரையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்திய பிரதமர் மோடி, “இவர்கள் இருவரும் நம் தேசத்தின் பெருமிதம்” என்று மனமாரப் பாராட்டினார். இதன் தொடர்ச்சியாக, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக இருவருக்கும் ‘சக்தி புரஸ்கார்’ விருதையும் வழங்கி கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இதற்கான நிகழ்வில் பங்கேற்க மகளிர் தினத்தில் டெல்லிக்குச் சென்றிருந்த கார்த்திகாயினி அம்மாவை, 
பிரதமர் மோடி சிரம் தாழ்த்தி கரம் கூப்பிய காட்சி பலரையும் பரவசமடையச் செய்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in