பள்ளிக்கூடத்துக்கு வெளியேதான் உலகமே இருக்கு...- சாதித்துக்காட்டிய சஹானா!

பள்ளிக்கூடத்துக்கு வெளியேதான் உலகமே இருக்கு...- சாதித்துக்காட்டிய சஹானா!

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

படிப்பு ஒன்றுதான் குழந்தையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கருதிக்கொண்டு, சதா சர்வநேரமும் ‘படி…படி’ என்று குழந்தையைப் பாடாய்ப்படுத்தும் பெற்றோர்களே இங்கு அதிகம். ஆனால், “இந்தக் கல்வி முறையே சரியில்லை. எனக்குப் படிக்கப் பிடிக்கலை” என்று மகள் சொன்னதைக் கேட்டுப் படிப்பை நிறுத்தியவர்கள் சஹானாவின் பெற்றோர். இந்த சஹானா இன்றைக்கு எழுத்துலகில் இளைய வரவாகக் கொண்டாடப்படும் கவிஞராக மிளிர்கிறார்.

தொலைதூரக் கல்வியில் இப்போது 12-ம் வகுப்பு படிக்கும் சஹானா, இந்த வயதிலேயே இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இலக்கிய வாசகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறார். தனக்கான உலகில் சிறகு விரித்துப் பறக்கும் சஹானாவின் படைப்புகளும், வாழ்க்கையும் பொதுச் சமூகம் உள்வாங்கியிருக்கும் கல்வி முறை மீது காத்திரமான கேள்விகளை முன்வைக்கின்றன.

குமரி மாவட்டம் வில்லுக்குறியில் உள்ள சஹானாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். புதிய கவிதை ஒன்றை எழுதும் உற்சாகமான மனநிலையில் இருந்தவர், தான் எதிர்கொண்ட சிக்கல்களையும், கவிதையின் துணையுடன் அதைக் கடந்துவந்த கதையையும் பகிர்ந்துகொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in