வில்லிசை... ஆன்மிகம்... அரசியல்!- திரும்பிப் பார்க்கவைத்த திருநங்கை

வில்லிசை... ஆன்மிகம்... அரசியல்!- திரும்பிப் பார்க்கவைத்த திருநங்கை

என்.பாரதி
readers@kamadenu.in

உள்ளாட்சித் தேர்தலில் அசல் வெற்றி யாருக்கு என்று அரசியல் கட்சிகளிடையே விவாதம் நடந்துகொண்டிருக்கலாம். ஆனால், அரசியல் கணக்குகளையெல்லாம் தாண்டி சமூக அளவில் பல ஆச்சரியங்களையும் நிகழ்த்தியிருக்கிறது இந்தத் தேர்தல். அந்த வகையில் குமரி மாவட்டம் தோவாளை கிராமத்தில் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்று வியக்கவைத்திருக்கிறார் திருநங்கை சந்தியாதேவி. இவர், தேசத்தின் முதல் திருநங்கை வில்லிசைக் கலைஞரும்கூட!

தோவாளை ஊராட்சியின் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் சந்தியாதேவியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரோ வாக்களித்த மக்களுக்கு வீடுவீடாகச் சென்று வாஞ்சையுடன் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

இவரது குரல் ஒலிக்காத சிறுதெய்வக் கோயில்களே தென் மாவட்டங்களில் இல்லை. தனது வீட்டருகே முத்தாரம்மனுக்குக் கோயிலும் எழுப்பியிருக்கிறார். அந்தப் பகுதிவாசிகள் இந்தக் கோயிலிலிருந்து ஆண்டுதோறும் தசரா திருவிழாவுக்கும் குலசை முத்தாரம்மனுக்கும் வேடமிட்டுச் செல்கின்றனர். இதோ இப்போதும் அந்த தசரா குழுவினர் ஒரே மாதிரியாகச் சேலை அணிந்து சந்தியாவோடு சேர்ந்து நன்றி சொல்ல பயணிக்கிறார்கள். தசரா குழுவைச் சேர்ந்த பெண்கள்தான் சந்தியாவை உற்சாகப்படுத்தி தேர்தலில் நிற்கவைத்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in