தறியோட்டும் தமிழ்ப்பித்தன்!- சிறையில் முளைத்த இலக்கியச் சிறகு

தறியோட்டும் தமிழ்ப்பித்தன்!- சிறையில் முளைத்த இலக்கியச் சிறகு

என்.பாரதி
readers@kamadenu.in

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது புனல்வேலி கிராமம் அங்குள்ள ஒரு வீட்டின் வாசலுக்கு வெளியே, ‘சட்...சட்…சட்’டெனத் தறி ஓட்டும் சத்தம் கேட்கிறது. பெரியார், திருவள்ளுவர், கண்ணதாசன் என வாசலில் அணிவகுக்கும் புகைப்படங்களும், சிதலமடைந்த சுவர்களும் அது ஒரு படைப்பாளியின் வீடெனப் பளிச்சென சொல்கின்றன. ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் ஆன வீட்டின் முன்பகுதியை வியாபித்திருக்கும் தறியை இயக்கிக்கொண்டிருக்கும் அந்த நெசவாளி, தமிழ்ச் சூழலில் அறியப்பட்ட எழுத்தாளரான ஆல.தமிழ்ப்பித்தன். ‘முகவரிகள்’, ‘அதிசயம் ஆனால் பொய்’, ‘முன்னாள் மனிதர்கள்’ ஆகிய படைப்புகள் மூலம் பரவலான கவனம் பெற்றவர்.

ஒழுகும் மழைநீரைத் தடுக்க வீட்டின் கூரை மீது போர்த்தப்பட்டிருப்பது, இவர் எழுதிய புத்தகத்துக்காக வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்தான். இந்தக் காட்சியே தமிழ்ப்பித்தனின் வாழ்க்கைச் சூழலையும் இலக்கிய தாகத்தையும் வெளிச்சம் போடுகிறது. எளிய மனிதர்களின் பிரதிநிதியாக இலக்கிய உலகில் இயங்கிவரும் தமிழ்ப்பித்தன், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர், அப்படியொரு போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தபோதுதான் எழுதவும் தொடங்கினார். ஆம், சிறையில்தான் இவருக்கு எழுத்துச் சிறகு முளைத்தது!

அதைப் பற்றி என்னிடம் பேசத் தொடங்கினார் ஆல.தமிழ்ப்பித்தன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in