8 வருசமா சிலிண்டர் சுமக்கிறேன்!- சிறார் இலக்கியம் படைக்கும் சிவக்கண்ணன்

8 வருசமா சிலிண்டர் சுமக்கிறேன்!- சிறார் இலக்கியம் படைக்கும் சிவக்கண்ணன்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

நாகர்கோவில்_ கீரிப்பாறை வழித்தடத்தில் வாடிக்கையாளர்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் லோடுமேன் சிவக்கண்ணன். ஆட்டோ செல்ல முடியாத குட்டிச் சந்துகளில் கூட தோளின் மீது சிலிண்டரைத் தூக்கிக் கொண்டு, வியர்வையில் நனைந்து சிலிண்டரை விநியோகிக்கும் சிவக்கண்ணன் ஓர் எழுத்தாளர். குழந்தை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்தவர்.

நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தைச் சேர்ந்த இவர், தன் ஊர்ப் பெயரையும் சேர்த்து ‘கோதை சிவக்கண்ணன்’ எனும் பெயரிலும், ‘உலகம்மா' எனத் தன் மனைவியின் பெயரிலும் எழுதி வருகிறார். முழுக்க சிறார் இலக்கியத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் இவர், ‘சிறுவர்களுக்கான நீதிநெறிக் கதைகள்’, ‘ஆத்திச்சூடி 51 கதைகள்’, ‘விலங்குகள் கூறும் விசித்திரக் கதைகள்’ என்று இதுவரை 23 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

“நான் ஏழ்மையான குடும்பத்துல பிறந்தவன். அப்பா, சுப்பிரமணிக்குப் பிறவியிலேயே காது கேட்காது. வாய் பேச முடியாது. அம்மா வள்ளியம்மாள் வீட்டிலேயே மரவள்ளி கிழங்குல அப்பளம் போடுவாங்க. அப்பா அதை ஒவ்வொரு கடையா போய் விப்பார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். என்னோட சேர்த்து நாலு பிள்ளைங்க. கிழங்கு அப்பளம் வித்துத்தான் ஆறு பேர் சாப்பிடணும். அதனால சின்ன வயசுல பசியோட படுத்த ராத்திரிகள்தான் அதிகம். படிக்கணும்னு ஆர்வம் இருந்துச்சு ஆனா, வீட்டுக்கு மூத்தவங்கிற முறையில பத்தாம் கிளாஸ்ல, பாதியிலேயே படிப்பை நிப்பாட்டிட்டு ஒரு வெத்தலை பாக்கு கடைக்கு வேலைக்குப் போயிட்டேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in