என்னருகில் மோடி..!- விழிகள் விரிக்கும் வனிதா ஸ்ரீ

என்னருகில் மோடி..!- விழிகள் விரிக்கும் வனிதா ஸ்ரீ

என்.பாரதி
readers@kamadenu.in

“நான் பூத்தொடுத்து மாணிக்க மாலை கட்டிட்டு இருக்கேன். என் பக்கத்துல வந்த பிரதமர் மோடி, ‘இது எங்க நாட்டுக் கலாச்சாரம். பூக்கள் இல்லாம நாங்க எந்த விசேஷத்தையும் தொடங்குறது இல்லை’ன்னு சீன அதிபர்கிட்ட இந்தியில சொல்றார். ‘எங்க ஊர்லயும் பூக்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் உண்டு’ன்னு சீன அதிபர் பதில் சொல்றார். அந்தத் தருணத்தை என்னால மறக்கவே முடியாது. இரு நாட்டுத் தலைவர்கள் என் பக்கத்துல வந்து தமிழ்நாட்டோட பெருமை பேசுறாங்கன்னா எவ்ளோ பெரிய விஷயம்” என்று கண்கள் விரியச் சொல்கிறார் எம்.டி.வனிதா ஸ்ரீ

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த வனிதா ஸ்ரீ, மாணிக்க மாலையை உயிர்மூச்சாகச் சுமப்பவர். இவரது குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக மாணிக்க மாலை கட்டுபவர்கள். திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் உற்சவர் சிலைக்கு இவரது குடும்பத்தினரே தினசரி மாணிக்க மாலை செய்து அனுப்புகின்றனர். இக்குடும்பத்தின் தொடர்ச்சியான கலைப் பங்களிப்பின் அங்கீகாரமாகவே மாமல்லபுரத்தில் மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார் வனிதா ஸ்ரீ.

தோவாளையில் உள்ள வனிதா ஸ்ரீயின் வீட்டுக்கு நான் சென்றிருந்தபோது, மொத்தக் குடும்பத்தினரும் மாமல்லபுர நிகழ்ச்சியைப் பற்றி சிலாகித்துக்கொண்டே பூ கட்டிக் கொண்டிருந்தனர். வனிதா ஸ்ரீயிடம் பேசினேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in