முத்திரை பதிக்கும் முகமில்லா ஓவியங்கள்!- சுயம்பு ஓவியர் மகேஷ்வரி

முத்திரை பதிக்கும் முகமில்லா ஓவியங்கள்!- சுயம்பு ஓவியர் மகேஷ்வரி

விக்கி
readers@kamadenu.in

ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற கலைப் படைப்புகளின் முக்கிய அம்சமாகப் பலராலும் பார்க்கப்படுவது முகம்தான். குறிப்பாக, கண்கள்தான் ஓவியத்துக்கு உயிர் தரும் என்பார்கள். ஆனால், முகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படியான பொது மனப்பான்மையைத் தனது ஓவியங்கள் மூலம் குலைத்துப்போடுகிறார் மகேஷ்வரி. இவர் வரையும் எந்த உருவத்துக்கும் முகம் இல்லை. ஆனால், இவரது தூரிகைத் தீண்டலில் உயிர்பெறும் முகமில்லா மனிதர்கள், நம்மிடம் உணர்வுரீதியாக உறவாடத் தவறுவதுமில்லை.

ஆர்வத்தின் பேரில் ஓவியம் வரையத் தொடங்கி, வணிக ரீதியாக வரவேற்பைப் பெற்றிருக்கும் மகேஷ்வரியைச் சந்தித்துப் பேசினேன்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். அப்பா பிசினஸ் பண்ணிட்டு இருந்தார். நான் பி.இ., முடிச்சிட்டு, எம்.இ., படிக்க ஆரம்பிச்சேன். அப்போ, என் அப்பா தவறிட்டார். அம்மாவும் நானும் தனியா வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிச்சோம். நான் படிப்பைப் பாதியில நிறுத்திட்டு, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். வாழ்க்கை சுமுகமா போய்ட்டு இருந்துச்சு. நல்ல சம்பளம், தொல்லை இல்லாத வேலை. ஆனா, அதுவே எனக்கு சலிப்பா ஆகிடுச்சு. வாழ்க்கையில சுவாரசியமே இல்லாம வெறுமையா இருந்துச்சு. அப்போ யதேச்சையா என் நண்பன் ஒருத்தன் அவன் வாட்ஸ்-அப் ஃப்ரொபைல் படமா ஒரு கால்பந்தாட்ட வீரருடைய படத்தை ஸ்டென்ஸில் ஓவியமா வச்சிருந்தான். சாதாரண ஓவியங்களைவிட ஸ்டென்ஸில் ஓவியம் என் கவனத்தை ஈர்த்துச்சு. சரி, நாமும் இப்படி ஒன்னு வரைஞ்சு பார்ப்போமேனு விளையாட்டா ஆரம்பிச்சேன். அப்ப வரைக்கும் என்னால வரைய முடியும்னு எனக்கே தெரியாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in