கதகளிக்கு நான்... பரதத்துக்கு நீ - கலையால் இணைந்த காதல் தம்பதி

கதகளிக்கு நான்... பரதத்துக்கு நீ - கலையால் இணைந்த காதல் தம்பதி

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தமிழக நடனக் கலையான பரதமும், மலையாள மண்ணின் அடையாளமான கதகளியும் சங்கமிக்கும் இல்லம் அது. பச்சைப் பட்டுச் சேலையில், நளினச் சிற்பமாக நடன வகுப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் பாரிஸ் லட்சுமி. சலங்கையின் ஒலியும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் சூழலை மேலும் மிளிரச் செய்கின்றன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லட்சுமி, இந்தியக் கலாச்சாரத்தின் மீது ஈர்க்கப்பட்டு பரதம் கற்றவர். கேரளத்தின் கதகளி நடனக் கலைஞரான பள்ளிப்புறம் சுனிலைக் காதலித்து மணம் முடித்தவர். பரதத்தின் மீதான தீராத தாகத்தால் தொடர்ந்து பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கியிருக்கும் லட்சுமி, காதல் கணவருடன் சேர்ந்து கதகளியும் பரதமும் இணைந்த நடன வகையை உருவாக்கி, நாட்டிய மேடைகளில் அற்புதங்களை நிகழ்த்திவருகிறார். 

வீட்டுக்குள் நுழைந்த நம்மை வாசலுக்கேவந்து வரவேற்றனர் சுனில் – லட்சுமி தம்பதியினர். தனது கலையுலகப் பிரவேசத்தைப் பற்றிய அறிமுகத்துடன் பேசத் தொடங்கினார் சுனில். “எனக்கு இதே வைக்கம்தான் பூர்விகம். என்னோட அப்பா பரமேஸ்வரன் நாயர் இந்தி வித்வானா இருந்தவர். அம்மா இல்லத்தரசிதான். வீட்டுல நானும் தங்கச்சி யுமா ரெண்டு பேர். வைக்கத்துல இருக்கிற மகாதேவர் கோயில் திருவிழாக்கள்ல கதகளி நிகழ்ச்சிகள் அடிக்கடிநடக்கும். அதையெல்லாம் பார்த்து வளர்ந்தவன் நான். அதனால, சின்ன வயசுலயே கதகளி மேல காதல் வந்துடுச்சு. வைக்கத்துல உள்ள ‘கலாபவ’னில் ஆரம்பநிலை கதகளி கத்துக்கிட்டேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in